வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 28 பிப்ரவரி 2015 (09:53 IST)

விற்பனைக்குவரும் அனுஷ்கா பயன்படுத்திய நகைகள்

அனுஷ்கா நடித்துள்ள ருத்ரம்மாதேவி விரைவில் திரைக்கு வருகிறது. படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், படத்தில் அனுஷ்கா பயன்படுத்திய நகைகள் விற்பனைக்கு வருகின்றன.
13 -ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ருத்ரம்மாதேவி ராணியை பற்றிய வீர காவியம் ருத்ரம்மாதேவி திரைப்படம். இதில் அனுஷ்கா ருத்ரம்மாதேவியாக நடித்துள்ளார். அனுஷ்கா படத்தில் அணிவதற்கு ஐந்து கிலோவில் நகைகள் புதிதாக செய்யப்பட்டன. இந்த நகைகளை அணிந்துதான் அனுஷ்கா படத்தில் நடித்தார்.
 
சென்னையிலுள்ள என்ஏ.சி. தங்க மாளிகை வடிவமைத்து செய்த இந்த தங்க நகைகள் விரைவில் விற்பனைக்கு வருகின்றன. சென்னை என்.ஏ.சி. தங்க மாளிகையில் ஐந்து கிலோ தங்க நகைகளும் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.
 
ருத்ரம்மாதேவி தமிழிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.