Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அனுஷ்காவை செல்லமாக இப்படி அழைக்கும் பாகுபலி நடிகர்!

Sasikala| Last Modified வியாழன், 18 மே 2017 (11:08 IST)
ராஜமெளலி இயக்கிய பாகுபலி 2 படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் சேர்ந்து நடித்துள்ளனர். பாகுபலி  2 படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதில் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. இந்நிலையில் ராணா, பிரபாஸ் மற்றும் படம் பற்றி அனுஷ்கா பேட்டி அளித்துள்ளார்.

 
நடிகை அனுஷ்கா கூறுகையில், பிரபாஸ், ராணா ஆகிய இருவரில் யார் செக்ஸி என்று அனுஷ்காவிடம் கேட்கப்பட்டது. அதற்கு  அவர் சற்றும் யோசிக்காமல் பிரபாஸ் தான் என்று பதில் அளித்தார். நடிகர் ராணா தன்னை பிரதர் என்று அழைப்பதாகவும்,  தானும் பதிலுக்கு அவரை பிரதர் என்று அழைப்பதாகவும் நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார். 
 
தொடர்ந்து அமரேந்திர பாகுபலியின் காதலியாகவும், மகேந்திர பாகுபலியின் தாயாகவும் நடித்தது சவாலாக இருந்தது. இது  இயக்குனர் ராஜமெளலி இல்லை என்றால் இது சாத்தியம் இல்லை என்கிறார். அனுஷ்கா பாகுபலி படங்களுக்கு முன்பாக பில்லா, மிர்ச்சி ஆகிய படங்களில் பிரபாஸுடன் சேர்ந்து நடித்துள்ளார். மீண்டும் நடிக்க தயார் என்றும் கூறியுள்ளார். 
 
அனுஷ்காவுக்கும், பிரபாஸுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக திரையுலகில் கிசுகிசுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :