Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியான அனு இம்மானுவேல்

cauveri manickam| Last Modified திங்கள், 17 ஜூலை 2017 (18:31 IST)
அல்லு அர்ஜுன் ஜோடியாக தெலுங்குப் படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார் அனு இம்மானுவேல். 
அமெரிக்காவில் பிறந்த நடிகையான அனு இம்மானுவேல், மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். ‘ஸ்வப்ன சஞ்சாரி’ மலையாளப் படத்தில், ஜெயராம் – சம்வ்ருதா சுனில் மகளாக, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் இவர். பின்னர், ‘ஆக்ஷன் ஹீரோ பிஜு’ படத்தில், நிவின் பாலிக்கு ஜோடியாக அறிமுகமானார்.

தெலுங்குப் படங்களிலும் நடித்துவரும் அனு, விஷால் ஜோடியாக ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்து வருகிறார். மிஷ்கின் இயக்கிவரும் இந்தப் படத்தில், பிரசன்னா மற்றும் ஆன்ட்ரியாவும் நடிக்கின்றனர். தற்போது, அல்லு அர்ஜுன் ஜோடியாக ஒரு தெலுங்குப் படத்தில் கமிட்டாகியுள்ளார் அனு. ‘நா பேரு சூர்யா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, வக்கந்தம் வம்சி இயக்குகிறார். விஷால் – சேகர் இசையமைக்கும் இந்தப் படத்தில், முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் சரத்குமார்.

 


இதில் மேலும் படிக்கவும் :