Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்த அஞ்சு கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்: திரையுலகினர்களுக்கு சாட்டையடி


sivalingam| Last Modified வெள்ளி, 7 ஜூலை 2017 (22:54 IST)
சமூக பிரச்சனைகளுக்காக அவ்வப்போது நீதிமன்றம் வரை சென்று போராடும் ஒரு இயக்கமாக இருந்து வரும் சட்டப்பஞ்சாயத்து இயக்கம், சமீபத்தில் ஏற்பட்ட திரையரங்க வேலைநிறுத்தம் குறித்தும் காட்டமான ஐந்து கேள்விகளை கேட்டுள்ளனர். 


 
 
எவ்வளவு வரி போட்டாலும் அதை மக்கள் தலையில் சுமத்தும் தியேட்டர்காரரகள் ஸ்டிரைக் செய்தது அநியாயம் என்றும் நியாயமாக மக்கள் தான் தியேட்டர் உரிமையாளர்களை எதிர்த்து ஸ்டிரைக் செய்ய வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். 
சட்டப்பஞ்சாயத்து கேட்டுள்ள 5 கேள்விகள் இதுதான்:
 
1. வாகன பார்க்கிங்கிற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் வசூலிக்க மாட்டோம் என்று அறிவிக்க தயாரா?
 
2. தியேட்டருக்குள் விற்கப்படும் உணவுப்பொருட்களை எம்.ஆர்.பி விலையில் விற்க தயாரா?
 
3. வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுப்பொருட்களை தியேட்டருக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை என்ற சட்டத்திற்கு புறம்பான போக்கை மாற்ற தயாரா?
 
4. தியேட்டர் கவுண்டரில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் வசூலிப்போம் என்று அறிவிக்க தயாரா?
 
5. சம்பாதிக்கும் கோடிக்கணக்கான பணத்திற்கு சட்டப்படி நாங்கள் வரி கட்டுவோம், கருப்பு பண பரிமாற்றம் செய்ய மாட்டோம் என்று திரை நட்சத்திரங்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிக்க தயாரா?
 
மேற்கண்ட ஐந்து கேள்விகளுக்கு எந்த திரையுலகினராவது பதில் சொல்கிறார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :