1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : திங்கள், 13 மார்ச் 2017 (06:57 IST)

அஜித்தின் சிக்ஸ்பேக் காட்சிக்கு மாஸ் டியூன். அனிருத் முயற்சி

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத், பாடல்களை கம்போஸ் செய்யும் பணிகளை முடித்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


 


இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் வெளியான சிக்ஸ்பேக் மாஸ் லுக்கிற்கு பின்னணி இசை மற்றும் தீம் மியூசிக் அமைக்கும் பணியில் தற்போது அனிருத் ஈடுபட்டுள்ளாராம்

அஜித் நடித்த மங்காத்தா' படத்தின் தீம் மியூசிக்கிற்கு இணையாக இந்த தீம் மியூசிக் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் தீவிர முயற்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. சிக்ஸ்பேக் மற்றும் தீம் மியூசிக் இரண்டும் சேர்த்து அஜித்தின் மாஸ் காட்சியாக இந்த படத்தில் அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.