வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 27 அக்டோபர் 2014 (11:20 IST)

முருகதாஸின் இந்திப் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்...?

அசினைத் தொடர்ந்து அனிருத்தையும் இந்திக்கு முருகதாஸ் அழைத்துச் செல்கிறார் என்பதுதான் இப்போது ஹாட் டாபிக். என்ன விஷயம்...?
 
கத்தியைத் தொடர்ந்து இந்தியில் மௌனகுரு படத்தை முருகதாஸ் ரீமேக் செய்வதாக கூறப்படுகிறது. அருள்நிதி நடித்த வேடத்தில் சோனாக்ஷி சின்கா நடிக்க உள்ளார். அதற்கேற்ப படத்தின் கதையில் முருகதாஸ் மாற்றங்கள் செய்துள்ளாராம். 
 
டிசம்பரில் தொடங்கயிருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத்தை இசையமைப்பாளராக முருகதாஸ் ஒப்பந்தம் செய்யவிருப்பதாக வதந்தி. அதிகாரப்பூர்வமாக எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இன்றைய வதந்தி நாளைய செய்தியாவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.