வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (10:27 IST)

இது நம்ம ஆளு படத்தின் இசை சர்ச்சை - கர்மா பார்த்துக் கொள்ளுமென குறளரசன் காட்டம்

சிம்பு, நயன்தாரா நடிக்கும் இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராகியிருக்கிறார், சிம்புவின் தம்பி, குறளரசன். அவருக்கு அனிருத்தும், சிம்புவும் உதவி செய்வதாகவும், அவர்களின் உதவியை வைத்தே குறளரசன் இது நம்ம ஆளு படத்தின் இசையை உருவாக்கி வருவதாகவும், ஒரு பிரபல வார இதழ் கிசுகிசு வெளியிட்டிருந்தது.
 
இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிலளித்துள்ளார் குறளரசன்.
 
வார இதழ் ஒன்றில் தேவையில்லாமல் வதந்திகளைப் பரப்புகிறார்கள். பொய்யான செய்திகளை பரப்பியதாக அந்த இதழ் மீது வழக்கு தொடரவுள்ளேன். அடுத்த மாதம் இது நம்ம ஆளு பாடல்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கிறேன். இப்படியான மலிவான விளம்பரத்தால் யாரும் பாடல்களின் வெற்றியைத் தடுக்க முடியாது.
 
இந்த புரளிகளுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரியும். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்கள் கர்மா அவர்களை பார்த்துக் கொள்ளும். இதற்கெல்லாம் எனது சக்தியை நான் வீணாக்க விரும்பவில்லை ஏனென்றால் நீங்கள் நினைப்பதை விட நான் மன முதிர்ச்சியடைந்தவன்.
 
நான் கடவுளை நம்புகிறேன். பாடல்கள் பெரிய ஹிட் ஆகவேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.