1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 24 அக்டோபர் 2014 (13:57 IST)

ஆம்பளையில் ஆண்ட்ரியா - உறுதி செய்தார் சுந்தர். சி

விஷாலை வைத்து இயக்கி வரும் ஆம்பளயில் ஆண்ட்ரியா கெஸ்ட் ரோலில் நடிப்பதை சுந்தர். சி உறுதி செய்துள்ளார்.

 
அரண்மனைக்குப் பிறகு சுந்தர். சி இயக்கிவரும் படம்தான் ஆம்பள. 2015 பொங்கலுக்கு படம் வெளியாகும் என்று தீபாவளிக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தெரியப்படுத்தியிருந்தனர். இதில் ஹன்சிகா ஹீரோயின். ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா ஆகியோரும் நடிக்கின்றனர். ஆண்ட்ரியா கெஸ்ட் ரோலில் நடிப்பதை சுந்தர். சி உறுதி செய்தார்.
 
சுந்தர். சியின் அரண்மனையில் நடித்த ஹன்சிகாதான் ஆம்பளயில் ஹீரோயின். அதேபோல் ஆண்ட்ரியாவும் அரண்மனையில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.