வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 22 அக்டோபர் 2014 (18:52 IST)

ஆம்பள பர்ஸ்ட் லுக் போஸ்டர்

தீபாவளியை முன்னிட்டு ஆம்பள படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

படத்தின் பூஜையின் போதே அதன் வெளியீட்டு தேதியை அறிவிப்பது ஏவிஎம் ஸ்டுடியோவின் வாடிக்கை (சிவாஜி விதிவிலக்கு. ஷங்கரை நம்பி தேதியை உறுதியாக சொல்ல முடியாதே). அந்த வழக்கத்தை இப்போது கடைபிடிப்பது விஷால் மட்டும்தான்.

பூஜை படத்துக்கு பூஜை போடும்போதே படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்தார். அதேபோல் படம் தீபாவளிக்கு வெளியாகியிருக்கிறது. அடுத்து நடித்து வரும் ஆம்பள படம் தொடங்கும் போதே 2015 பொங்கலுக்கு படம் வெளியாகும் என்றார். இன்று வெளியிடப்பட்டிருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் பொங்கல் வெளியீட்டை உறுதி செய்துள்ளனர்.

பூஜை, ஆம்பள இரு படங்களும் விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.