வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 23 நவம்பர் 2016 (15:12 IST)

தமிழில் வெளியாகும் அமீர் கானின் டங்கல்

அமீர்கானின் புதிய படம் டங்கல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.


 
 
இந்திப் படங்களின் சந்தை படத்துக்குப் படம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான எம்எஸ் டோனி - தி அன் டோல்ட் ஸ்டோரி சென்னையில் மட்டும் 2 கோடிகளைத் தாண்டி வசூலித்தது.

ரன்பீர் கபூர் நடித்த ஏ தில் ஹே முஷ்கில் திரைப்படம் ஒரு கோடியை தாண்டி வசூலித்தது. இதன் காரணமாக அமீர்கானின் டங்கலை யுத்தம் என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிடுகின்றனர்.
 
யுத்தம் தமிழில் வெற்றி பெற்றால் அது இந்திப் படங்களுக்கு புதிய சகாப்தமாகவும், தமிழ்ப் படங்களுக்கு புதிய அச்சுறுத்தலாகவும் அமையும்.