சுச்சிலீக்ஸில் என் வீடியோ வருமென ஆவலுடன் காத்திருந்தேன் - அமலாபால் ஓப்பன் டாக்


Murugan| Last Modified வியாழன், 8 ஜூன் 2017 (16:33 IST)
கடந்த ஏப்ரல் மாதம்,  பிண்ணனிப் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் கணக்கிலிருந்து பிரபல சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அந்தரங்கப் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

 
ஆனால், தன்னுடைய டிவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு, அதில் புகைப்படங்கள் வெளியாகி வருவதாகவும், அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என சுசித்ரா தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. 
 
அதில் தனுஷ், த்ரிஷா, விஜய் டிவி புகழ் டிடி(திவ்யதர்ஷினி) உள்ளிட்ட சில நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகின. அதேபோல், நடிகர் தனுஷும், நடிகை அமலாபாலும் இடம்பெறும் வீடியோ ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும் என சுசித்ரா டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் வெளியாகவில்லை.


 

 
இந்நிலையில், இவ்வளவு நாட்கள் கழித்து இதுபற்றி பேசியுள்ள நடிகை அமலாபால் “என் வீடியோ வெளியாகும் என கூறப்பட்டதும், அப்படி என்னதான் வெளியாகும் என பார்ப்போம் என ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால், அதற்குள் அந்த டிவிட்டர் கணக்கு டீஆக்டிவேட் ஆகிவிட்டது. இதனால் அந்த வீடியோவை பார்க்க முடியாமல் போனதில் எனக்கு வருத்தமே” என அமலாபால் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :