1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 12 ஜூன் 2017 (21:56 IST)

அமலாபாலின் புதிய காதலர் யார்? மறுதிருமணம் எப்போது?

பிரபல இயக்குனர் விஜய் மற்றும் நடிகை அமலாபால் ஜோடி மிகச்சிறந்த நட்சத்திர ஜோடியாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு அது விவாகரத்து வரை சென்றது.



 


விவாகரத்துக்கு பின்னர் அமலாபால் தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய வாழ்வில் மீண்டும் காதல், கல்யாணம் உண்டு என்றும் தான் ஒன்றும் இமயமலைக்கு சன்னியாசியாக போகும் எண்ணம் இல்லை என்றும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் தன்னுடைய புதிய ஜோடி யார் என்பதை சமயம் வரும்போது தெரிவிக்கவுள்ளதாகவும், இந்த திருமணம் எல்லோரும் அறியும் வண்ணம் வெளிப்படையாக நடைபெறும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இப்போதைக்கு நடிப்பில் முழு கவனம் செலுத்தவுள்ளதாகவும் தன்னுடைய எண்ணம் முழுவதும் தான் நடித்து வரும் கதாபாத்திரங்களில் மட்டுமே உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

விஐபி 2, திருட்டுப்பயலே 2, விஷ்ணுவுடன் ஒரு படம் என பிசியாக இருக்கும் அமலாபால், விரைவில் இன்னும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.