இனிதே முடிந்த இயக்குனர் விஜய், அமலா பால் திருமணம்

அமலா பால், விஜய், அமலா பால் திருமணம், சினிமா, பொழுதுபோக்கு
Geetha Priya| Last Updated: வெள்ளி, 13 ஜூன் 2014 (15:08 IST)
இயக்குனர் விஜய் - நடிகை அமலா பால் திருமணம் இன்று காலை சென்னையில் உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்த இனிதே நடந்தது.
கிரீடம் படத்தின் மூலம் இயக்குனரான விஜய்யும், அமலா பாலும் தெய்வத்திருமகள் படத்தில் ஒன்றாக பணிபுரிந்த போது காதல் வயப்பட்டனர். இந்தக் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். கடந்த 7-ம் தேதி விஜய் - அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் கேரளாவில் நடந்தது. 12 -ம் தேதி திருமணம் என ஏற்கனவே முடிவு செய்திருந்தனர்.
அமலா பால், விஜய், அமலா பால் திருமணம், சினிமா, பொழுதுபோக்கு
இன்று காலை சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் பெற்றோர்களின் ஆசியுடன் விஜய் அமலா பாலின் கழுத்தில் தாலிகட்டினார். பொதுவாக மணமக்கள் அமாந்திருக்க இந்த சடங்கு நடக்கும். மாறாக அமலா பால் நின்று கொண்டிருக்க அவரது கழுத்தில் விஜய் தாலி கட்டினார்.
அமலா பால், விஜய், அமலா பால் திருமணம், சினிமா, பொழுதுபோக்கு
திருமண நிகழ்வில் இயக்குனர்கள் மணிரத்னம், பாலா, ஆர்.சுந்தர்ராஜன், பொன்வண்ணன், ஜெயம் ராஜா நடிகர்கள் விக்ரம், ஆர்யா, கிரேஸி மோகன், விஜய் மனைவி சங்கீதா, பாடகி சைந்தவி, எடிட்டர் மோகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இதில் மேலும் படிக்கவும் :