1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Updated : செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (13:56 IST)

முடிவானது அமலா பால், விஜய் திருமண தேதி

அமலா பாலும், இயக்குனர் விஜய்யும் காதலிக்கிறார்கள் என்று எழுதிய பொழுதெல்லாம் அதனை மறுத்துவந்தவர்கள் கடைசியில் காதலை ஒப்புக் கொண்டனர். அதுவும் எப்படி?
விஜய் வெளிநாடு சென்றிருக்கும் நேரத்தில், எங்களின் எதிர்காலம் குறித்து விஜய் சென்னை வந்ததும் தெரிவிப்போம் என்று சின்ன அறிக்கை மூலம் தங்களின் காதலை அமலா பால் ஒப்புக் கொண்டார்.
 
அதனைத் தொடர்ந்து அமலா பாலின் அம்மாவும் மகளின் காதலை ஆமோதித்தார். போன் பில் அதிகரித்ததை வைத்து அமலா பாலின் காதலை அறிந்து கொண்டதாகவும், அதுபற்றி கேட்பதற்கு முன் அமலா பாலே தங்களை திருமணத்துக்கு ஒத்துக் கொள்ள வைத்ததாகவும் அவர் கூறினார்.
 
இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கேரள முறைப்படி ஜுன் 7 ஆம் தேதி நடக்கயிருக்கிறது. திருமணம் அனேகமாக சென்னையில் நடக்கக்கூடும். திருமண தேதி ஜுன் 12. சென்னையிலுள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபம் இவர்களின் திருமணத்துக்காக பதிவு  செய்யப்பட்டுள்ளது.