சூர்யா படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்

CM| Last Updated: திங்கள், 14 மே 2018 (18:59 IST)
தெலுங்கு நடிகரான அல்லு சிரிஷ், சூர்யா நடிக்க இருக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.
 
சூர்யாவை வைத்து ‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படங்களை இயக்கிய கே.வி. ஆனந்த், அடுத்ததாக ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், ‘சூர்யா 37’ என அழைக்கப்பட்டு வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.
 
சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்பட வெளிநாடுகளிலும் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என 3 மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
 
இந்நிலையில், தெலுங்கு நடிகரான அல்லு சிரிஷும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இவர் ஏற்கெனவே ராதாமோகன் இயக்கத்தில் வெளியான ‘கெளரவம்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்திருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :