1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : சனி, 20 ஜனவரி 2018 (15:24 IST)

விக்ரமுக்கு ஜோடியானார் அக்‌ஷரா ஹாசன்

கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன், விக்ரம் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

 
கமல்ஹாசன் நடிப்பில் ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா, அடுத்ததாக விக்ரமை வைத்து இயக்க இருக்கிறார். இந்தப் படத்தை, கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அக்‌ஷரா ஹாசன் நடிக்கிறார்.
 
விக்ரம் தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் ஹரி இயக்கத்தில் ‘சாமி ஸ்கொயர்’ படங்களில் நடித்து வருகிறார். ‘துருவ நட்சத்திரம்’ இறுதிக்கட்டத்திலும், ‘சாமி ஸ்கொயர்’ 50 சதவீதத்துக்கு மேலும் எடுக்கப்பட்டுள்ளது.