Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஜீத் ரத்த காயங்களுடன் வைரலாக பரவும் புகைப்படம்!

Sasikala| Last Updated: வெள்ளி, 17 மார்ச் 2017 (10:30 IST)
விவேகம் படப்பிடிப்பு தளத்தில் அஜீத் ரத்த காயங்களுடன் நிற்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த  புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சிவா இயக்கத்தில் அஜீத், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன்  உள்ளிட்டோர் நடித்து வரும் படம் விவேகம்.

 
இறுதி கட்ட படப்பிடிப்புக்காக அஜீத் பல்கேரியா சென்றுள்ளார். இந்நிலையில் அஜீத்தின் புதிய புகைப்படத்தை படக்குழு  வெளியிட்டுள்ளது. பனியாக இருக்கும் இடத்தில் அஜீத் கிழிந்த சட்டையுடன், ரத்தக் காயங்களுடன் தலை குனிந்து நிற்கும்  புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு ட்வீட் போட்டுள்ளனர். 
 
அதில் புகழ் மற்றும் மரியாதை வருகிறதென்றால் அதற்கு ஒரு விலை இருக்கிறது. அந்த விலைதான் கடின உழைப்பு. மேலும்  தல எப்பவுமே ஹாட் என்பதை உணர்த்தும் வகையில், சுற்றி இவ்வளவு பனி இருந்தாலும் தல செம ஹாட் என  குறிப்பிட்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :