ரஜினி சாதனையை 1 மணி நேரத்தில் முறியடித்த அஜித்!

Last Modified திங்கள், 26 நவம்பர் 2018 (16:16 IST)
தல அஜித் தற்போது சிறுத்தை சிவா கூட்டணியில் 4 வது முறையாக கைகோர்த்துள்ள படம் "விஸ்வாசம்" இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக தயாராகி வருகிறது.
 
இந்நிலையில் நேற்று வெளியான அஜித்தின் விஸ்வாசம் படத்தின் போஸ்டர் ஒரு மணி நேரத்தில் ரஜினியின் ‘பேட்ட’ பட சாதனையை முறிடியத்துள்ளது.
 
எந்த வித முன்னறிவிப்பும் இன்றி, யாரும் எதிர்பாராத வகையில் நேற்று இரவு அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி எல்லோருக்கும் அதிர்ச்சியை தந்தது. இந்த போஸ்டர் தற்போது 18 மணி நேரத்திற்கும் மேலாக டிரண்டிங்கில் உள்ளது.
 
மேலும் யூடியூப் டிரண்டிங்கில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ள ‘விஸ்வாசம்‘ மோஷன் போஸ்டர், ரஜினியின் ‘பேட்ட’ மோஷன் போஸ்டர் சாதனையை ஒருமணி நேரத்தில் தகர்த்துள்ளது. 
 
ரஜினியின் ‘பேட்ட’ பட மோஷன் போஸ்டருக்கு யூடியூபில் 1,43,000 லைக்ஸ்கள் கிடைத்துள்ள நிலையில் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பட மோஷன் போஸ்டருக்கு ஒரே மணி நேரத்தில் 1,57,000 லைக்ஸ்கள் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த போஸ்டர் தற்போது வரை 2,39,000 லைக்ஸ்கள் பெற்று இந்தியாவிலேயே அதிக லைக்ஸ்கள் பெற்ற மோஷன் போஸ்டர் என்ற சாதனையை பெற்றுள்ளது. 
 
மேலும் ‘விஸ்வாசம்’ மோஷன் போஸ்டர் யூடியூபில் இந்தியாவில் நம்பர் 1 இடத்திலும், கட்டார் நாட்டில் 8வது இடத்திலும், இலங்கையில் 23வது இடத்திலும் டிரெண்டிங்கில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :