அக்‌ஷராஹாசனுக்கு ஆறுதலாக இருந்த அஜித்...


Cauveri Manickam (Murugan)| Last Modified செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (12:31 IST)
அக்‌ஷராஹாசன் ஏகப்பட்ட டேக் வாங்கியபோது, அவருக்கு ஆறுதலாக இருந்து உற்சாகப்படுத்தியிருக்கிறார் அஜித். 

 

 
சிவா இயக்கத்தில், அஜித் – காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ள படம் ‘விவேகம்’. பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், அக்‌ஷரா ஹாசன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த சில வருடங்களாக தன் படத்தின் பூஜை, புரமோஷனுக்கு கூட அஜித் வருவதில்லை. அதனால், இசை வெளியீட்டு விழாவைக்கூட நடத்தாமல், நேரடியாக படத்தை ரிலீஸ் செய்துவிடுகின்றனர்.
 
இந்நிலையில், ஆகஸ்ட் 10ஆம் தேதி ‘விவேகம்’ படம் ரிலீஸாக இருக்கிறது. வழக்கம்போல அஜித் அமைதியாக இருக்க, காஜல் அகர்வாலோ தெலுங்கு, தமிழ் என மாறி மாறி நடித்துக் கொண்டிருக்கிறார். எனவே, அக்‌ஷராவை வைத்து மட்டுமே புரமோஷன் செய்ய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் சிவா. அவரும், “நான் இருபது டேக் கூட வாங்குனேன். அஜித் சார் தான் ‘கூல்… கூல்…’ சொல்லி என்னை ரிலாக்ஸ் செய்தார்” என்கிறார் அக்‌ஷரா.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :