விவேகம் படப்பிடிப்பில் நடுங்கிய அஜித்


Abimukatheesh| Last Updated: வியாழன், 13 ஜூலை 2017 (18:40 IST)
10 டிகிரி வெப்ப நிலையில் அஜித் கிழிந்த சட்டையுடன் நடித்த காட்சிகளில் ஷாட் முடிந்தவுடன் நடுங்க ஆரம்பித்து விடுவார் என விவேகம் படத்தின்  ஒளிப்பதிவாளர் வெற்றி கூறியுள்ளார்.

 

 
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் நடந்துக் கொண்டிருக்கிறது. விவேகம் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி படப்பிடிப்பு குறித்த தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் அஜித் குறித்து கூறியதாவது:-
 
பல்கேரியாவில் 10 டிகிரி வெப்ப நிலையில் ஷூட்டிங் முழுவதும் நடைப்பெற்றது. அஜித் குளிரிலும் பல காட்சிகளில் கிழிந்த சட்டையோடு மட்டுமே நடித்தார். இதுபோன்ற காட்சிகளில் ஷாட் முடிந்தவுடன் நடுங்க ஆரம்பித்துவிடுவார். மற்றவர்கள் யாரும் அவரைப் போல் நடித்திருக்க மாட்டார்கள் என்றார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :