வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ashok
Last Updated : செவ்வாய், 13 அக்டோபர் 2015 (14:50 IST)

அறிவிச்சிட்டாங்கப்பா வேதாளம் ஆடியோ வெளியீட்டு தேதி

அஜித் நடித்துள்ள வேதாளம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர்.

 

 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வேதாளம் படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது. சமீபத்தில் வெளியான டீஸர் குறுகிய காலத்தில் லட்சக்கணக்கான ஹிட்ஸ்களை அள்ளியது. இந்நிலையில், வரும் 16 -ஆம் தேதி படத்தின் பாடல்களை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

வேதாளத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இளைஞர்கள் மத்தியில் அனிருத்தின் இசைக்கு வரவேற்பு அதிகம் உள்ளது. அஜித் - அனிருத் காம்பினேஷன் முதல்முறை என்பதால் பாடல்களை கேட்க அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

சுவாரஸியமான தகவல், வரும் 16ஆம் தேதி அனிருத்தின் பிறந்தநாள். அனிருத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வேதாளம் பாடல்கள் வெளியாகின்றன.