1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 20 ஏப்ரல் 2015 (11:20 IST)

இன்று தொடங்குகிறது அஜீத் - சிவா படம்

வீரம் படத்தை இயக்கிய சிவாவின் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படம் இன்று தொடங்குகிறது.
 

 
கோட் அணிந்த அஜீத்தை பல வருடங்களுக்குப் பிறகு கிராமத்து வேடத்தில் தோன்றச் செய்து, வேட்டி கட்டிவிட்டவர் இயக்குனர் சிவா. அவரது வீரம் பரவலான வரவேற்புடன் தமிழகமெங்கும் ஓடியது. 
 
சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் இரண்டாவது படம் இன்று தொடங்குகிறது. ஸ்ருதி ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை. ஏ.எம்.ரத்னத்தின் ஸ்ரீ சாய் ராம் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.