அஜித்தின் சிக்ஸ்பேக் சிடி வருதாமே...?

Sasikala| Last Modified புதன், 15 பிப்ரவரி 2017 (16:41 IST)
விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் சிக்ஸ் பேக் உடம்பில் சிங்கம் போலிருந்தார் அஜித். அது வளர்த்த உடம்பில்லை  போட்டோஷாப்பில் வரைந்த உடம்பு என்று இணையம் முழுக்க கிண்டல்கள் கேலிகள்.

 
கஷ்டப்பட்டு வரவழைத்த சிக்ஸ் பேக்கை இப்படி சின்னத்தனமா விமர்சனம் செய்றாங்களே என்று அஜித்தின் ட்ரெய்னர் முதல்  லைட்பாய்வரை அனைவருக்கும் வருத்தம். தங்கல் அமீர் கான் மாதிரி ஒரு வீடியோ வெளியிடலாம் என்று சொன்னதை அஜித்  மறுத்துவிட்டார் என்கிறார்கள்.
 
என்றாலும், படம் வெளியாவதற்குள் அஜித்தின் சிக்ஸ் பேக் எப்படி வந்தது என்ற வீடியோ வெளியிட இருக்கிறார்கள்.
 
ம்... படத்துக்கு நல்ல விளம்பரமாக இருக்கும்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :