ராணாவிடம் சிக்ஸ் பேக்கின் ரகசியத்தை சொன்ன அஜித்


Abimukatheesh| Last Updated: புதன், 15 பிப்ரவரி 2017 (16:46 IST)
விவேகம் படத்தின் பர்ஸ் லுக் போஸ்டர் வெளியானதும் அனைத்து நடிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அஜித் தனது சிக்ஸ் பேக் ரகசியம் குறித்து நடிகர் ராணாவிடம் தெரிவித்துள்ளார்.

 

 
அஜித் நடிப்பில் வெளியாகும் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என அனைத்து நடிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த போஸ்டரில் அஜித் சிக்ஸ் பேக் வைத்து நின்று கொண்டிருப்பார்.
 
இந்த போஸ்டர் வெளியானதை அடுத்து சமூக வலைதளங்களில் கிராபிக்ஸ் என்று செய்தி பரவியது. அதற்கு சிவா அஜித் கடுமையான உழைத்து இந்த சிக்ஸ் பேக் வைத்துள்ளார். இது உண்மை, படம் வெளியான பிறகு உங்களுக்கு தெரியும் என்று தெரிவித்தார்.
 
அஜித்தின் சிக்ஸ் பேக் போஸ்டர் பார்த்த தெலுங்கு நடிகர் பாகுபலி புகழ் ராணா அதிர்ச்சி அடைந்து அஜித்துக்கு போன் செய்துள்ளார். ராணா அஜித்துடன் ஆரம்பம் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. போன் செய்த ராணா அஜித்திடம் சிக்ஸ் பேக் உண்மையா என கேட்டுள்ளார்.
 
அதற்கு அஜித் ஆமாம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து ராணா கூறியதாவது:-
 
அஜித்தை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நானும் அவருடன் சேர்ந்து ஜிம்மில் ஒர்க் அவுட் செய்துள்ளேன். அவருக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் வலிகளுடன் கஷ்டப்பட்டு சிக்ஸ் பேக் வைத்துள்ளார், என்று கூறியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :