க்ளீன் ஷேவ், மொட்டத்தலை: தல அஜித்தின் புதிய கெட்டப்!

Last Modified புதன், 12 ஜூன் 2019 (09:06 IST)
'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தை அடுத்து தல அஜித் நடிக்கவுள்ள 'தல 60' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் முதல் தொடங்கும் என்றும் இந்த படம் அஜித்தின் மிகவும் விருப்பத்திற்குரிய பைக் ரேஸ் குறித்த கதையம்சம் கொண்டதால் அவரது நிஜ வாழ்வில் நடந்த சில சம்பவங்களும் இந்த படத்தில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது
இந்த நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது இந்த வீடியோவில் அஜித் மொட்டத்தலையுடன் க்ளீனாக ஷேவ் செய்து தோற்றமளிக்கின்றார். இதுதான் 'தல 60' கெட்டப் அன்று கூறப்படுகிறது.

அஜித் நடித்த சமீபத்திய திரைப்படங்கள் அனைத்திலும் பெப்பர் சால்ட் மற்றும் வயதான லுக்கில் பார்த்து ரசிகர்கள் சலித்துவிட்ட நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் இளமையான, வித்தியாசமான தோற்றத்தில் அஜித் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. எனவே அஜித் ரசிகர்கள் உச்சகட்ட உற்சாகத்தில் உள்ளனர்


இதில் மேலும் படிக்கவும் :