1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 30 அக்டோபர் 2014 (10:21 IST)

அஜீத் யட்சனில் நடிக்கப் போவதில்லை

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா, கிருஷ்ணா நடித்து வரும் படம் யட்சன். யுடிவி விஷ்ணுவர்தனுடன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது.
கதைப்படி தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரின் ரசிகராக ஆர்யா படத்தில் வருகிறார். படத்தில் அந்த சூப்பர் ஸ்டாராக காட்டப்பட்டிருப்பவர் அஜீத். படம் நெடுக அஜீத்தின் ரசிகராக ஆர்யா வருகிறார்.
 
இந்நிலையில் யட்சனில் அஜீத் கெஸ்ட் ரோலில் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாயின. ஆனால் அதனை அஜீத் தரப்பும், யட்சன் படக்குழுவும் மறுத்துள்ளது. அப்படியெந்த ஐடியாவும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
விஷ்ணுவர்தன், ஆர்யா இருவருமே அஜீத்தின் நட்பு வட்டத்தில் வருகிறவர்கள். ஆரம்பம் இவர்களின் நட்பை பலப்படுத்தியது. ஆக, கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.