1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ashok
Last Updated : திங்கள், 5 அக்டோபர் 2015 (17:50 IST)

வாட்ஸ்-அப்பில் வெளியான அஜீத் படத்தின் வேதாளம் தீம் மியூசிக்?

அஜீத் நடித்து வரும் வேதாளம் படத்தின் தீம் மியூசிக்  வாட்ஸ்-அப்பில் பரவி வருவதால் தல ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 


 

 
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், சுருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி மற்றும் அஸ்வின் ஆகியோர் நடிப்பில் உருவாகி வருகிறது வேதாளம். இந்த படம் அஜீத்தின் 56 வது படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் டீசரை வருகின்ற 8ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாக  தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
 
மேலும், மிகவும் விலை உயர்ந்த டுகாட்டி பைக்கில் அஜீத் வேதாளம் படத்தில் நடித்திருப்பதாகவும் படக்குழுவினர் கூறுகின்றனர். 
 
இந்நிலையில் தற்போது, வாட்ஸ்-அப்பீல் வேதாளம் படத்தின் தீம் மியூசிக் வெளியாகி இருப்பது அஜீத் ரசிகர்கள் இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பில்லா , மங்காத்தா, போன்ற படத்தின் தீம் மியுசிக் வரிசையில் வேதாளம் படத்தின் தீம் மியூசிக் இருப்பதாக தல ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த தீம் மியுசிக் வேதாளம் படத்தின் தீம் மியூசிக் அல்ல என்று படக்குழுவினர் மறுத்துளளதாக தகவல் வெளியாகியுள்ளது