வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 20 நவம்பர் 2014 (11:27 IST)

இந்தியில் பிளேயர் கில்லாடியாக நுழையும் அஜீத்

ஆரம்பம் படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போவதாக படம் வெளியான போது பேசினார்கள். படத்தின் கதை மும்பையை மையப்படுத்தியது என்பதால் அந்தப் பேச்சுக்கு ஒரு வலு இருந்தது.
ஆனால் அந்த பேச்சு பேச்சாகவே முடிந்திருக்கிறது. யாரும் படத்தை ரீமேக் செய்ய முன் வரவில்லை. 
 
அதனால் பிளேயர் கில்லாடி என்ற பெயரில் இந்தியில் படத்தை டப் செய்து வெளியிடுகின்றனர். சினி கார்ன் என்டர்டெய்ன்மெண்ட் டப்பிங் உரிமையை பெற்றிருக்கிறது.
 
இதற்குமுன் ஷாருக்கானின் அசோகா இந்தி நேரடிப் படத்தில் அஜீத் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.