Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஜித் படத்தை பச்சைக்குத்திக் கொண்ட ஆர்.கே.சுரேஷ்

Sasikala| Last Updated: வியாழன், 29 டிசம்பர் 2016 (16:04 IST)
தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என்று பல முகங்கள் இருந்தாலும் தாரை தப்பட்டையில் வில்லனாக நடித்ததுதான்  ஆர்.கே.சுரேஷுக்கு அடையாளத்தை ஏற்படுத்தித் தந்தது. இப்போது அவர் பல படங்களில் நாயகன்.

 
அரை டஜனுக்கு மேல் படங்களில் நடித்துவரும் ஆர்.கே.சுரேஷ், பில்லா பாண்டி என்ற படத்திலும் நடிக்கிறார். இந்தப் படத்தில்  அவர் அஜித்தின் ரசிகராக வருகிறார். அதற்காக அஜித் படத்தை உடம்பில் பச்சைக்குத்திக் கொண்டிருப்பது போல் வருகிறாராம்.
 
அஜித்தின் பெருமையை ஒருபடி அதிகரிக்க வைக்கும் படமாக பில்லா பாண்டி இருக்குமாம்.
 
இருக்கிற பெருமையை பொடியாக்காமல் இருந்தால் சரிதான்.
 


இதில் மேலும் படிக்கவும் :