பவன் கல்யாணை வரவேற்கும் அஜித் ரசிகர்கள்!


Sasikala| Last Updated: திங்கள், 20 மார்ச் 2017 (17:58 IST)
அஜித் நடிப்பில் தமிழில் சூப்பர் ஹிட்டான வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான கட்டமராய்டு படத்தில் பவர் கல்யாண் தற்போது நடித்து வருகின்றார். மார்ச் இறுதியில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் டிரைலர் நேற்று முந்தினம் வெளிவந்தது.

 
 
தமிழகத்திலும் நேரடி தெகுங்கு படமாக திரைக்கு வரவிருக்கும் இப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் பெரும் வரவேற்பு  கொடுத்துள்ளனர். மதுரை மற்றும் தேனி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அஜித் ரசிகர்கள் பவன் கல்யாண் மற்றும்  அஜித் படங்களுடன் கூடிய பேனர் மற்றும் போஸ்டர் ஒட்டி அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள்.
 
பவன் கல்யாண் படத்திற்கு முதன்முறையாக தமிழக ரசிகர்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர். இதனால் இப்படத்தை அதிகமான திரையரங்குகளில் வெளியிட விநியோகஸ்தர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த கட்டமராய்டு படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :