Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இன்னும் 4 நாள் தான் இருக்கு… ஆர்வத்துடன் காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்


cauveri manickam| Last Modified வியாழன், 15 ஜூன் 2017 (19:19 IST)
அஜித் படத்தின் முழு பாடல் ஒன்று, இன்னும் 4 நாட்களில் ரிலீஸாக இருக்கிறது.

 


அஜித் படத்தின் டீஸர், டிரெய்லர், ஃபர்ஸ்ட் லுக், பாடல், படம் என எது வெளியானாலும், அவருடைய ரசிகர்களுக்கு அது திருவிழா தான். சின்னது, பெரியது என வித்தியாசம் பார்க்காமல் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். அதன்படி, நேற்று வெளியான டீஸரின் முழு பாடலும் இன்னும் 4 நாட்களில், அதாவது ஜூன் 19ஆம் தேதி ரிலீஸாகப் போகிறதாம்.

எனவே, அதற்காக இப்போது முதலே ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள், அதுவரை 25 விநாடிகள் கொண்ட அந்தப் பாடலின் டீஸரைக் கேட்டு கேட்டு ரசித்து வருகின்றனர். சிவா இயக்கியுள்ள இந்த ‘விவேகம்’ படத்தில், காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார். அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை, சோனி நிறுவனம் வாங்கியுள்ளது.


 


இதில் மேலும் படிக்கவும் :