அஜித்துடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசிக்கின்றேன். விவேக் ஓபராய்

Sivalingam| Last Modified வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (05:15 IST)
அஜித் நடித்து வரும் 57வது படமான 'விவேகம்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. சென்னை மற்றும் பல்கேரியாவில் படப்பிடிப்பு நடைபெறவுள்ள இந்த படம் வரும் ரம்ஜான் திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், அஜித் குறித்து தனது டுவிட்டரில் பாராட்டி எழுதியுள்ளார்.

அஜித் அண்ணா மிகவும் பணிவான மற்றும் அடுத்தவர் மீது அக்கறை உள்ள ஒரு தங்கமான மனிதர். சென்னையில் அவருடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் மிகவும் ரசிக்கிறேன் அவருடைய அன்புக்கு நன்றி என்று தனது டுவிட்டரில் விவேக் ஓபராய் கூறியுள்ளார்.

அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :