விண்வெளிக்கதை இல்லையா ‘விஸ்வாசம்’?

C.M.| Last Updated: சனி, 23 டிசம்பர் 2017 (14:56 IST)
‘வீரம்’ படத்தைப் போல கிராமத்துக் கதையாக உருவாக இருக்கிறதாம் ‘விஸ்வாசம்’.
அஜித்தை வைத்து நான்காவது முறையாக சிவா இயக்கும் படத்திற்கு, ‘விஸ்வாசம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. முதல் படம் தமிழ்நாடு, அடுத்த படம் இந்தியா, அதற்கடுத்த படம் வெளிநாடு என வெரைட்டியாக எடுத்துள்ளார் சிவா.


‘நான்காவது படம், முன்னர் எடுத்த படங்களைவிட அடுத்த லெவலில் இருக்கும்’ என்றார் சிவா. அடுத்த லெவல் என்றால், விண்வெளிதான். எனவே, ஹாலிவுட் லெவலுக்கு ஒரு படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.
ஆனால், கிராமத்துக் கதையாக ‘விஸ்வாசம்’ படத்தை இயக்கப் போகிறாராம் சிவா. ‘வீரம்’ போல மண்மணக்கும் கதையைத் தயார் செய்துள்ளார். ஒருவேளை ‘வீரம்’ படத்தின் இரண்டாம் பாகமாகக் கூட அது இருக்கலாம் என்கிறார்கள். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக கூறப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :