Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஐஸ்வர்யா தனுஷின் பரதத்தை பற்றி நடன கலைஞர் முருகசங்கரி லியோ!

Sasikala| Last Updated: செவ்வாய், 14 மார்ச் 2017 (15:11 IST)
ஐ.நா.சபையில் நடைபெற்ற விழாவில், ஐஸ்வர்யா தனுஷ் ஆடிய நடனம் பெரும் சர்ச்சைக்கும், கிண்டலுக்கும் ஆளானது. அவர்  ஆடியது பரதமே இல்லை என பல பரத நாட்டிய கலைஞர்கள் கூறினர். அவர் ஆடியது பரதக் கலைஞர்கள் பலரை அதிருப்தி அடைய வைத்துள்ளது. மேலும் நெட்டிசன்கள் ஐஸ்வர்யாவை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.

 
ஐஸ்வர்யா தனுஷ் பரதநாட்டியம் ஆடியது சரியில்லை என்று பரதக் கலைஞர் முருகசங்கரி லியோ பிரபு மற்றும் கதக் நடன  கலைஞர் ஸ்ரீதா பாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
பரத நாட்டிய ஜாம்பவான்கள் மற்றும் பிரபல கலைஞர்கள் தான் அந்த அரங்கில் ஆடியிருக்க வேண்டும். நடிகை ஷோபானா  போன்றோர் நடிகையாக இருந்தாலும் அவர் சிறந்த நடன கலைஞர், என கதக் நடன கலைஞர் ஸ்ரீதா பாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் 14 ஆண்டுகளாக கிளாசிக்கல் நடன கலைஞராக உள்ள எனக்கு ஐஸ்வர்யா  ஒரு நடன கலைஞர் என்பதே அண்மையில் தான் தெரியும். மேலும் அவர் ஆடிய நடனம் சரியில்லை என்றும் கூறினார்.
 
எந்த துறையாக இருந்தாலும், ஒரு கலைஞர் அதிகாரம் உள்ளவராக இருந்தாலும் சிறந்தவராக இருந்தால் பரவாயில்லை என்று  பரதநாட்டிய கலைஞரும், ஆய்வாளருமான முருகசங்கரி லியோ பிரபு கூறியுள்ளார். மேலும் பரதம் சவாலான கலை. அதற்காக பலர் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :