வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 16 டிசம்பர் 2016 (15:47 IST)

சண்டைக் காட்சி கலைஞர்களுக்காக ‘சண்டை’ போட்ட ஐஸ்வர்யா தனுஷ்

தேசிய விருதுகள் வழங்கும் பட்டியலில் இனி சண்டைக் காட்சிக் கலைஞர்களும் சேர்க்கப்பட்டு, கௌரவிக்கப்பட வேண்டும் என்று ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.


 

சண்டைக் காட்சி நடிகர்கள் சங்கத்தின் 50 ஆண்டு தினத்தை ஒட்டி அக்கலைஞர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், “சினிமா வீரன்” எனும் பெயரில் ஒரு படத்தினை நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் உருவாக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு ரஜினிகாந்த் குரல் கொடுக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.

பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்கான ஐ.நா. அமைப்பின் இந்தியாவிற்கான தூதராகவும், சினிமா இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் செயல்பட்டுவரும் ஐஸ்வர்யா அண்மையில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சரைச் சந்தித்து ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.

இந்திய சினிமாக்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் பட்டியலில் இனி சண்டைக் காட்சிக் கலைஞர்களும் சேர்க்கப்பட்டு, கௌரவிக்கப்பட வேண்டும் என்று அந்த கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரின் கோரிக்கையை ஏற்று வரும் 64வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறப்பான முறையில் சண்டைக் காட்சிகளை அமைக்கும் கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.