திங்கள், 30 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 20 ஜூலை 2016 (22:23 IST)

ஏர் ஏசியாவின் ‘கபாலி’ உருவான விதம் எப்படி? - வீடியோவை பாருங்கள்

இந்திய விமான சேவை நிறுவனமான ஏர் ஏசியா, தனது விமானங்களில் கபாலி படத்தினை வரைந்தது எப்படி என்று வீடியோ வெளியிட்டுள்ளது.
 

 
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. தாணு தயாரித்திருக்கும் இப்படம் வருகின்ற வெள்ளிக்கிழமை [ஜூலை 22] வெளியாக உள்ளது.
 
இந்நிலையில், ஏர் ஏசியா நிறுவனம் 'கபாலி' படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் படக்குழுவோடு ஒப்பந்தம் போட்டது. அதற்காக தனியாக 'கபாலி' படத்தின் புகைப்படங்கள், போஸ்டர்கள் ஒட்டப்பட்ட ஒரு விமானத்தை தயார் செய்தது. அது எவ்வாறு உருவானது எப்படி என்பதை விளக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
 
வீடியோ இங்கே: