Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஷால் மீதான நடவடிக்கையில் தயாரிப்பாளர் சங்கம் முடிவு!

Sasikala| Last Updated: வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (17:43 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகளை விமர்சித்து, நடிகர் விஷால் பத்திரிகைக்கு பேட்டியளித்ததைத்  தொடர்ந்து கடந்த நவம்பர் 14ம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார்.
 
 
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக நடிகர் விஷால் கூறினால், அவரது இடைநீக்கம் உத்தரவை மீண்டும் பரிசீலிக்கலாம் என்று கூறினார். இதுகுறித்து விஷால் தரப்பின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அவரது வக்கீலுக்கு உத்தரவிட்டார். ஐகோர்ட்டில் வருத்தம் தெரிவித்து விஷால் சார்பில் மனு தாக்கல்  செய்யபட்டது.
 
இந்நிலையில் விஷால் மீதான சஸ்பெண்ட் ரத்து செய்துள்ளது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். சென்னையில் இன்று  நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விஷால் மன்னிப்பு கேட்டுக்கொண்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :