1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (12:41 IST)

அட்லியின் அடுத்த பட டைட்டில் 'ஆளப்போறான் தமிழன்': மீண்டும் விஜய் படமா?

சமீபத்தில் வெளியான அட்லியின் 'மெர்சல்' படம் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவர் தற்போது அடுத்த படத்திற்காக திரைக்கதை அமைப்பதில் பிசியாக உள்ளார். இந்த நிலையில் 'ஆளப்போறான் தமிழன்' என்ற டைட்டிலை அவர் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதால் அவருடைய அடுத்த பட டைட்டில் இதுதான் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் மீண்டும் விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அட்லி தற்போது மூன்று ஹீரோக்கள் படம் ஒன்றின் திரைக்கதையை எழுதி வருவதாகவும், இந்த படத்திற்கு அடுத்தே அவர் விஜய் படத்தை இயக்குவார் என்றும் இன்னொரு செய்தியும் வெளிவந்து கொண்டிருக்கின்றது

இந்த நிலையில் அடுத்த படம் விஜய் படமா? அல்லது மூன்று ஹீரோக்கள் படமா? என்பது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.