நோ சொன்ன கீர்த்தி; கமிட் ஆவாரா நயன்? ராணா வெயிட்டிங்!

Sugapriya Prakash| Last Updated: வியாழன், 17 அக்டோபர் 2019 (16:43 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க மறுத்த படத்தில் நயன்தாராவின் கால்ஷிட்டை கேட்டுள்ளார் தயாரிப்பாளர் ராணா. 

 
பாகுபலி படத்தில் நடித்து பிரபலமான ராணா தற்போது கொரியன் ரீமேக் படத்தை தயாரிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக உள்ள இந்த படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் கேட்கப்பட்டது. 
ஆனால், கீர்த்தி இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். ஆம், படபிடிப்பிற்கு படக்குழுவினர் கேட்ட தேதிகளை அவரால் ஒதுக்க முடியாததால் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க நயன்தாராவை அனுகியுள்ளனர். 
 
இந்த படத்தின் கதையை கேட்டு முடித்துவிட்டதகாவும் இன்னும் தனது முடிவை நயன்தாரா தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. தென்னிந்திய பட உலகில் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் இருக்கும் நயன்தாராவின் நடிப்பில் தீபாவளிக்கு பிகிலும், பொங்களுக்கு தர்பாரும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :