வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (09:51 IST)

நயன்தாரா நாயகனுக்கு ஜோடியாகும் ‘அருவி’ நாயகி!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘லவ் ஆக்சன் டிராமா’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின்பாலிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
 
 
இந்த நிலையில் நிவின்பாலி நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ‘படவெட்டு’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ‘அருவி’ நாயகி அதிதிபாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ‘அருவி’ என்ற ஒரே படத்தின் மூலம் தமிழக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த அதிதிபாலன், அந்த படம் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் ஆகிய பின்னரும் எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகாமல் இருந்தார்.
 
 
இந்த நிலையில் ‘படவெட்டு’ படத்தின் கதையை கேட்டதும் அதில் நடிக்க அதிதிபாலன் ஒப்புக்கொண்டுள்ளார். அறிமுக இயக்குநர் லிஜோ கிருஷ்ணா இயக்கத்தில் இந்த படம் உருவாகின்றது. இவர் ஏற்கனவே மலையாளத்தில் பல குறும்படங்கள் இயக்கியுள்ளார் என்பதும் அவற்றில் ஒன்று விருது பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சன்னிவாய்னே புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு, ’96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்க உள்ளார்.