Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா பிரதமர் மோடிக்கு கடிதம்

Sasikala| Last Modified சனி, 15 ஜூலை 2017 (17:31 IST)
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா. இவர் ஊட்டச்சத்து மருத்துவரான இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார்  மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.கடந்த வாரம் சில வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்கள் திவ்யா சத்யராஜ் தவறான மருந்தை பிரயோகிக்க மறுத்ததை தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் செய்தனர்.
 
இதை தொடர்ந்து திவ்யா சத்யராஜ் நேற்று பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, "அங்கீகரிக்கப்படாத, அபாயகரமான மருந்துகளை தடை செய்யுமாறு பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் நீட் நுழைவு தேர்வினால் வரும் விளைவை பற்றியும், மருத்துவ உலகில் பெருகி வரும் அசிங்கத்தை பற்றியும், நுழைவு  தேர்வில் நடக்கும் அநியாயங்கள் பற்றியும் திவ்யா எழுதியிருக்கிறார்".


இதில் மேலும் படிக்கவும் :