உலகத்திலேயே பரிதாபமானவர்கள் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்தான்: கஸ்தூரி

Last Modified ஞாயிறு, 26 நவம்பர் 2017 (15:29 IST)
சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட பின்னர்தான் பலருக்கு தயாரிப்பாளர்கள் எந்த அளவுக்கு கஷ்டப்படுகின்றனர், எந்த அளவுக்கு வட்டிக்கு வாங்கி தங்கள் சொத்தையே இழக்கின்றனர், ஒருசிலர் உயிரையும் அதற்கும் மேலான மானத்தை இழக்கின்றனர் என்பது கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகின்றது

இந்த நிலையில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் குறித்து நடிகை கஸ்தூரி கூறியபோது, 'உலகத்திலேயே ஒரு பரிதாபமான ஜென்மங்கள் என்றால் அது தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் தான். ஒரு படத்தை கஷ்டப்பட்டு தயாரித்துவிட்டு பின்னர் அதை ரிலீஸ் செய்யும் முந்தைய நாள் வேறு வழியில்லாமல் அவர்கள் பைனான்சியர்களிடம் பணம் வாங்கித்தான் தீரவேண்டிய நிலை உள்ளது

அன்புச்செழியனை நான் நேரில் பார்த்தது கிடையாது. இருந்தாலும் நான் கேள்விப்பட்டவரை அவர் கொடுத்த பணத்தை வாங்கும் முறையில் மட்டுமே கடுமை உள்ளது. ஆனால் மற்ற பைனான்சியர் போல் கொடுத்த செக்கை மோசடி செய்யும் வழக்கம் அவரிடம் இல்லை' என்று கூறினார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :