நடிகை நந்தினி கணவர் கார்த்திக்கின் கடைசி விருப்பம்!

Sasikala| Last Modified புதன், 5 ஏப்ரல் 2017 (17:31 IST)
நடிகை மைனா நந்தினியின் கணவர் கார்த்திக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அந்நிலையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கார்த்திகேயன் எழுதியுள்ள கடிதத்தில் கடிதம் ஒன்றில் எனது தற்கொலைக்கு தனது மனைவி நந்தினியின் தந்தைதான் காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 
மற்றொரு கடிதம் கார்த்திக் தன் அக்கா ரம்யாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ரம்யா அம்மாவ கூப்பிட்டு போய் வைச்சிக்கோ. நீ அம்மாவ பார்த்துக்கோ என தெரிவித்துள்ளார். என்னால இதுக்கு மேலே வாழ முடியவில்லை. எனக்கு வாழவும்  தெம்பு இல்லை. இத்தனை நாள் பிணமாக தான் வாழ்ந்தேன். இனிமேலும் என்னால் வாழ முடியவில்லை. என் கௌரவம்,  மரியாதை போச்சு. அம்மாவ பார்த்துக்கோ என கார்த்திக் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
என் இறுதி ஆசை. வெண்ணிலாவை புதைத்த இடத்தில் பக்கத்தில் என்னையும் புதையுங்கள் ப்ளீஸ் என கார்த்திக் அந்த  கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :