வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: திங்கள், 29 மே 2017 (15:08 IST)

மீண்டும் கதாநாயகியாக களம் இறங்கும் நமீதா...

சில வருடங்களுக்கு முன் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் கலக்கி வந்த நடிகை நமீதா தற்போது மீண்டும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.


 

 
திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த அவரின் உடல் எடை கூடியதால், பட வாய்ப்புகளை இழந்து மும்பையில் செட்டில் ஆனார். அதன் பின் ஒருவழியாக உடல் எடைய குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். 
 
இந்நிலையில், மியா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். மலையாளத்தில் ‘ஸ்பீடு’ என்ற படத்தின் மூலம் பிரபலமான இரட்டை இயக்குனர்கள் மேத்யூ ஸ்கேரியா மற்றும் ஆர்.எல்.ரவி ஆகியோர் இப்படத்தை இயக்குகின்றனர்.
 
இப்படம் ஹாரர் மூவியாக உருவாகவுள்ளது. இப்படத்தில் நமீதாவின் கதாபாத்திரம் குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர்கள் “மியா மற்ற பேய் படங்களை போல் யாரையும் பயமுறுத்தாது. கணவன் மனைவி இருவருக்குமிடையே ஏற்படும் பிரச்சனையை மையமாக கொண்டது இப்படத்தின் கதை. ஒரு சூழ்நிலையில், ஒரு பேய் வீட்டில் நமீதா மாட்டிக்கொள்ள அவருக்கு என்ன நடக்கிறது என்பதுதான் கதை” என அவர் தெரிவித்துள்ளனர்.