வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 20 மே 2015 (14:10 IST)

ஜீவாவின் திருநாள் - நயன்தாராவுடன் இணைந்த மீனாட்சி

ஜீவா, நயன்தாரா நடிக்கும் திருநாள் படத்தில் மீனாட்சி முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.
 
கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் மீனாட்சி தாவணியில் நடித்தபோது கரணைப் போலவே பலரும் கையெடுத்து கும்பிட்டனர். ஆனால், தமிழ் சினிமாவுக்குதான் அது பிடிக்காதே. போட்டியை சமாளிக்க கவர்ச்சியில் இறங்கி கடைசியில் வெள்ளக்கார துரையில் ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் போட்டார்.
குத்தாட்டம் என்ற விபத்து நடந்த பிறகு அந்த பாதிப்பிலிருந்து வெளியேறுவது கடினம். தமிழ் சினிமா அனுமதிக்காது. மீனாட்சிக்கு அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது. திருநாள் படத்தில் ஜீவா, நயன்தாராவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ராம்நாத் படத்தை இயக்குகிறார்.
 
இனிமேல் குத்தாட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அந்தத் திசைக்கே பெரிய கும்பிடு போட்டுள்ளார் மீனாட்சி.