வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 15 டிசம்பர் 2014 (15:43 IST)

மீண்டும் நடிக்க வரும் லிஸி

விக்ரம் படத்தில் ரசிகர்களை பரவசப்படுத்திய லிஸி மலையாளத்தில் டாப்பில் இருந்த நேரம் இயக்குனர் ப்ரியதர்ஷனை திருமணம் செய்து நடிப்பிலிருந்து முழுமையாக விலகினார். 1990 -இல் இவர்கள் திருமணம் நடந்தது.
 
24 வருட தாம்பத்தியம் டிசம்பர் ஒன்றாம் தேதி முடிவுக்கு வந்தது. அன்று விவாகரத்து கோரி குடும்பலநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் லிஸி.
 
ப்ரியதர்ஷனை பிரிவது உறுதி என்ற நிலையில் மீண்டும் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அவருக்கு இயக்குனர் ராம் தனது படத்தில் வாய்ப்பு தர முன்வந்துள்ளார். விரைவில் மலையாளப் படங்களிலும் அவர் நடிக்கயிருப்பது குறிப்பிடத்தக்கது.