1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 20 அக்டோபர் 2014 (12:23 IST)

முத்தம் தரமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டேன் - ஓபன் நடிகை

சதுரங்க வேட்டையில் நடித்த இஷாரா பாரதி கண்ட புதுமைப் பெண்ணைவிட ஓரடி முன்னால் இருக்கிறார். கேரக்டருக்காக தன்னை மாற்றிக் கொள்ள தயாராக இருப்பவர், அதே சின்சியாரிட்டியை கிளாமர் விஷயத்தில் காட்டவும் தயாராக உள்ளார்.
சதுரங்க வேட்டைக்குப் பிறகு அதிமேதாவிகள், பப்பரப்பம் ஆகிய இரு படங்களில் இஷாரா நடிக்கிறார். அதிமேதாவிகள் படத்தில் இஷாராவுக்கு கல்லுnரி மாணவி வேடம். பப்பரப்பா எண்பதுகளில் நடக்கும் கதை. அதற்கேற்ப அந்தக்காலகட்ட பெண்ணாக உடை, நடை, பாவனையில் மாற்றம் ஏற்படுத்தி நடிக்கிறார்.
 
இவ்விரு படங்களுக்கும் ஸ்லிம்மான தோற்றம் வேண்டுமென்பதற்காக எட்டு கிலோவரை எடையை குறைத்திருக்கிறார். கேரக்டருக்காக தன்னை மாற்றிக் கொள்ள தயாராக இருப்பது போல், முத்தக் காட்சியில் நடிக்க - கதைக்கு தேவை என்றால் - மாட்டேன் என்று சொல்ல மாட்டாராம். கிளாமரிலும் தாராளம் காட்ட அவர் தயார்.
 
இவ்வளவு தகுதிகள் இருக்கே... கோடம்பாக்கத்தில் ஒரு ரவுண்ட் என்ன பல ரவுண்ட்கள் வருவீங்க மேடம்.