கவர்ச்சிக்கு ‘தடா’ போடும் நடிகை

cauveri manickam| Last Modified வெள்ளி, 19 மே 2017 (15:24 IST)
தன்னைத் தேடி வருகிற வாய்ப்புகள் எல்லாமே கிளாமராக இருப்பதால், அப்படிப்பட்ட கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் என ஜகா வாங்குகிறாராம் நடிகை.அரசியல் வாரிசுக்கு ஜோடியாக கடந்த வாரம் வெளியான படத்தில் நடித்திருந்தார் இந்த நடிகை. இதற்கு முன் அவர் நடித்த படங்களில் இவ்வளவு கவர்ச்சியில்லை. ஆனால், இந்தப் படத்தில் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே காட்டியிருந்தார். படத்தில் இருந்த ஒரே ஒரு உருப்படியான விஷயம் அது மட்டும்தான். கதையே இல்லாத அந்தப் படத்தை, அவருடைய சதை தான் கொஞ்ச நஞ்சம் காப்பாற்றியது.

இந்நிலையில், அந்தப் படத்தைப் பார்த்து அடுத்தடுத்து வரும் வாய்ப்புகள் எல்லாமே கிளாமர் ரோல்களாகவே வருகிறதாம். அப்படியெல்லாம் நடிச்சா ரெண்டு, மூணு வருஷத்துக்குத்தான் நடிக்க முடியும் என்பதை நடிகை புரிந்து வைத்திருப்பதால், ‘பர்ஃபாமென்ஸ் பண்ணக்கூடிய கேரக்டரா இருந்தா மட்டும் சொல்லுங்க’ என்று வாசல்வரை வந்து வழியனுப்பி வைக்கிறாராம் நடிகை.

 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :