1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2015 (20:51 IST)

நடிகை பாபிலோனாவுக்கு திருமணம் - காதலரை மணக்கிறார்

தமிழ், மலையாளம் என பல மொழிகளில் பாபிலோனா நடித்து வருகிறார். அவ்வப்போது கவர்ச்சி நடனமும் உண்டு. இவர் தனது நீண்டநாள் காதலரை வரும் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொள்கிறார்.
 

 
பாபிலோனாவும், ஆரணியைச் சேர்ந்த தொழிலதிபர் சுந்தர் பபுல்ராஜும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து, சென்னையிலுள்ள பாபிலோனாவின் வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
 
வரும் 9 -ஆம் தேதி சென்னை வடபழனி ஆதித்யா ஹோட்டலில் இவர்களின் திருமணம் நடக்க உள்ளது. பாபிலோனாவின் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன் என்று பாபிலோனா உறுதியளித்துள்ளார்.