படுக்கைக்கு அழைத்த அந்த நடிகர் - நடிகை ஓபன் டாக்


Murugan| Last Modified புதன், 11 ஜனவரி 2017 (09:12 IST)
தன்னுடன் நடித்த நடிகர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைக்கும் விதத்தில் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக நடிகை வேதா பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

 

 
தமிழில் வேகம், அகரம், கருப்பம்பட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை வேதா. மேலும், அர்ச்சனா என்ற பெயரில் சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
 
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் “என்னுடன் நடித்த ஒரு ஹீரோ என்னிடம் தவறாக நடக்க முயன்றார். படப்பிடிப்பு முடிந்தபின், என்னுடன் பேசிக்கொண்டிருந்த அவர், என்னுடைய படத்தில் கதாநாயகியாக உன்னை நடிக்க வைத்ததற்கு பதிலாக எனக்கு நீ என்ன தருவாய்? என இரட்டை அர்த்தத்தில் பேசினார்.
 
‘உங்களுக்கு தர என்னிடம் ஒன்றுமில்லை’ என கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறி விட்டேன். இதனால் கோபமடைந்த அந்த ஹீரோ படத்தில் நான் நடித்த பல காட்சிகளை  நீக்க சொல்லிவிட்டார்” எனக் கூறினார். ஆனால் அந்த ஹீரோ யார் என்பதை அவர் கூற மறுத்து விட்டார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :